கல்லடி வேலூர் - 13 ஆம் வட்டாரம், மட்டக்களப்பு மாநகர சபைக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் சரவணமுத்து பிறேமானந்தம் அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன், ஞா. ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்துகொண்டதுடன், கட்சி வாலிபர் முன்னணியினர், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கல்லடி, கல்லடி வேலூர் - 13 ஆம் வட்டாரத்தில் பிரதம வேட்பாளராக சரவணமுத்து பிறேமானந்தம், பிரதி வேட்பாளராக தங்கத்துரை சாந்திக்குமார் ஆகியோர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.