நாளை 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியா பௌத்த நிலைய விகாரையில் நாளை (10) மாலை நடைபெறவுள்ளது.
வெசாக் வாரத்தில் 3 நாட்களுக்கு நாடளாவிய ரீதியிலுள்ள இறைச்சி, மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.
நுவரெலியாவில் நடைபெறும் தேசிய வெசாக் பண்டிகை மற்றும் அனுராதபுரத்திற்கு செல்லும் பக்தர்களுக்காக இன்று (09) முதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.