கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அவமானத்தை துடைத்தெறிய இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் E. ஸ்ரீநாத் தெரிவித்தார்
எமது மாவட்ட மக்கள் அதிக ஆதரவினை வழங்கியிருந்தனர் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் பல சதி திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
மாவட்டத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது ஜனாதிபதியோ அமைச்சர்களோ நமக்கு உதவ முன் வரவில்லை அவ்வாறான காலகட்டத்தில் நாம்தான் அதிக அக்கறையுடன் செயல்பட்டவர்கள் .
இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை புளியந்தீவு தெற்கு 18 வட்டார வேட்பாளர் வைத்தியர் இ. கருணாகரன் அவர்களின் தேர்தல் பணிமனை அலுவலக திறப்பு விழாவின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
நேற்று இரவு இடம் பெற்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவின் போது இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராஜ சிங்கம் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வரதன்


.jpeg)





