கல்லடி மட்டக்களப்பு தேசிய மக்கள் சக்தியின் தேர்தல்பிரச்சார கூட்டத்தில்
கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹெந்தும்
நெத்தி கலந்து கொண்டார் .
உள்ளுராட்சி சபைகளின் தேர்தல்பிரச்சார இறுதி
நாளான இன்று மட்டக்களப்பு கல்லடி கட்சி பணி மனையில் தேசிய மக்கள்
சக்தியின் தேர்தல்பிரச்சார கூட்டம் இன்று மாலை இடம் பெற்றது .
கைத்தொழில்
மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹெந்தும் நெத்தி
தலைமையில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரகூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ,மட்டக்களப்பு
உள்ளுராட்சி மன்ற முதன்மை வேட்பாளர் முதன்மை வேட்பாளர் DR.K.பிரேமகுமார்,
மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணித் தலைவி வனிதா,13ம் வட்டார வேட்பாளர்
சத்திய சீலன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் ,கல்குடா தொகுதி அமைப்பாளரும் வங்கி மற்றும் நிதி மன்றத்தின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினருமாகிய தோழர் திலிப்குமார் ஆகியோரும் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று இருந்தார்கள் .
அமைச்சர் பேசும் போது மட்டக்களப்பு மக்கள் ஜனாதிபதியை நேசித்தால் தென் பகுதி மக்கள் உங்களை நேசிப்பார்கள் என்றார் .
தேர்தல் பிரச்சாரகூட்டதிற்கு , கட்சி ஆதரவாளர்கள் ,கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .