உந்துருளியில் பயணித்த இளைஞர் ஒருவர் காட்டு யானை மீது மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார் .

 


திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் கன்னியா பகுதியில் நேற்று (14) இரவு யானை மீது மோதி உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் நண்பன் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் 22 வயதுடைய நண்பனே விபத்தில் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.