
இலங்கை அரசாங்கத்தினால் மானுட நீதிக்காயும் அமைதிக்காகவும் ஓய்வின்றி உழைத்த உத்தமராம் அருட்தந்தை பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மாவட்டத்தில் உள்ள சகல அரச திணைக்களங்களிலும் தேசியக்கொடி அரக்கம்பத்தில் பறக்க விட பட்டிருந்ததுடன் வெள்ளை கொடிகளும் பறக்க விடப்பட்டிருந்தது
இதேவேளை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆலயக் கொடிகள் அறக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது
மட்டக்களப்பு கோட்டமுனை மெதடிஸ்த தேவாலயத்திலும் அவருக்கான நினைவஞ்சலி பதாதிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு போலீஸ் நிலையத்திலும் வெள்ள கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தது
மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் சிறைச்சாலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திலும் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்திலும் அருட்தந்தை அவர்களின் மறைவை குறிக்கும் வகையில் வெள்ளை கொடிகள் பறக்க விடப்பட்டிருந்ததுடன் அவருக்கு அஞ்சலி செலுத்தும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது
இதேவேளை மட்டக்களப்பு மறை மாவட்ட கல்வி நிலையத்திலும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிறிஸ்தவ கொடிகள் அறக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்ததுடன் நினைவு பதாகைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அடிகளுக்கான நினைவஞ்சலி நிகழ்வு
கத்தருக்குள் நித்திரை அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்விற்கும் பணிக்கும் நன்றி செலுத்தும் வழிபாடு மாவட்ட சர்வ மத ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பூ கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை கே ஜேசுதாஸ் தலைமையில் மட்டக்களப்பு சாஸ்ஸ் மண்டபத்தில் இன்றுபிற்பகல் இடம் பெற்றது
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருவுருவ படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து ஆத்ம சாந்தி விசேட வழிபாடுகள் இடம் பெற்றதை அடுத்து நினைவஞ்சலி வழிபாடுகளும் இரங்கல் உரைகளும் இடம் பெற்றது.
வரதன்




