பிள்ளையானுக்கு சட்டத்தரணியாக ஆஜராகிறார் உதய கம்மன்பில.

 


விளக்கமறியலிலுள்ள பிள்ளையானை சந்திக்கவும் அவருக்கு அனுமதி
தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, பிள்ளையானை சந்திக்கக கம்மன்பிலவிற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அனுமதியானது, பிள்ளையானின் சட்டத்தரணியாக கம்மன்பில செயற்படுவதால் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்போது, கைதுக்கான காரணம் உடனடியான தெரிவிக்கப்படாத நிலையில், பின்னர் 2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது