மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளின் ஆறாவது ஆண்டு நினைவஞ்சலி கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள நினைவு தூபியில் இடம்பெற்றது.
2019 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் பயங்கரவாத குண்டு தாக்குதலில் உயிரிழந்த 31 உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது
இறந்த உறவுகளின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மதகுருமார், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் குறித்த நிகழ்விற்கு பலத்த பாதுகாப்பும் மட்டக்களப்பு பொலீசாரால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.