ஆத்ம ஈடேற்றத்திற்கு இறை பிரார்த்தனை செய்கிறோம்- இந்துக் குருமார் அமைப்பு.





Pope Francis அவர்களினது மறைவு அறிந்து மிகவும் கவலை அடைந்தோம். சமயம் கடந்த நிலையில், இனம் கடந்த நிலையில், மொழி கடந்த நிலையில் அன்பினை நேசித்தவராக மனிதப்பண்பினை மதித்தவராக விளங்கியவர் Pope Francis அவர்கள். அவரது இழப்பு மிகவும் கவலையை அளித்துள்ளது. இலங்கை சைவ மக்கள் சார்பில் அமரரது ஆத்ம ஈடேற்றத்திற்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். துயரடைந்துள்ள அன்புள்ளங்களுக்கு எமது ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம்.
ஓம் சாந்தி.

கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.
தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.
செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு.