மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி பத்மசுதன் தக்க்ஷன்யா 3 A சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் பத்தாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

 

 




















 மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 2024 ஆம் ஆண்டு மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் விஞ்ஞான துறையில் தோற்றிய பத்மசுதன் தக்க்ஷன்யா எனும் மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் பத்தாம் இடத்தினை 3 A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் இருந்து மருத்துவ பீடத்திற்காக மெரிட் சித்தியில்  ஏழு பேரும்

மாவட்ட அடிப்படையில் ஒருவருமான பொறியியல் பீடத்திற்கு மெரிட் சித்தியில் இருவருமாக முகாமைத்துவ பீடத்திற்கு 8 மாணவர்களும் சித்தி அடைந்துள்ளனர்.

இம்முறை தோற்றிய மாணவர்களில் 150 பேர் வரை பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் என வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் அதிபர்  தெரிவித்துள்ளார்.