உணவு பொதியை கொண்டு வரும் வரை ரயிலை தாமதப்படுத்திய சாரதி அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 


மறந்துபோன உணவு பொதியை கொண்டு வரும் வரை ரயிலை தாமதப்படுத்திய சாரதி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குருநாகலில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலே இவ்வாறு தாமதமாக இயக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது குறித்த சாரதி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சாரதிக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

இதனால் பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.