நான் மற்றவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதில்லை. ஆனால் மற்றவர்கள் தனக்கு எதிராக சுமார் 400 வழக்குகளை தொடுத்துள்ளனர் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

 


உலகில் அதிக வழக்குகளைக் கொண்ட நபர் தான் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தான் மற்றவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதில்லை. ஆனால் மற்றவர்கள் தனக்கு எதிராக சுமார் 400 வழக்குகளை தொடுத்துள்ளதாகவும், உலகிலேயே அதிக வழக்குகளை கொண்ட நபராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வழக்குகளும் ஒரு நாள் தான் மரணிக்கும் போது முடிவுக்கு வரும்.
அதேவேளை, மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், பண்டாரநாயக்க போன்ற அரசியல் தத்துவஞானிகள் சுட்டுக் கொல்லப்பட்டது போன்று, ஒரு குழுவினர் தனது கொள்கைகளையும் அழித்துள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.