மட்டக்களப்பு கல்லடி உப்போடையை பிறப்பிடமாகவும் கல்லடி - திருச்செந்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட சாமஸ்ரீ தேச மானிய
உதயகுமார் உதயகாந்த் முழு இலங்கை தீவிற்குமான சமாதான நீதவானாக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.மொகமட் பஸீல் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துள்ளார்.
இவர் மட்டக்களப்பு கல்லடி - உப்போடை விவேகானந்தா கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியையும், கொழும்பு - மாதம்பிட்டி புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரக் கல்வியையும், புனித மிக்கேல் கல்லூரி மற்றும் கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயங்களில் தனது உயர்தரக் கல்வியையும் கற்று குறித்த பாடசாலைகளின் பழைய மாணவருமாவார். அத்துடன் இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கை நெறியையும், தனியார் பல்கலைக்கழகமொன்றில் Diploma in psychology and counselling &
Diploma in Human Rights ஆகிய டிப்ளோமா கற்கை நெறிகைகளையும்
பூர்த்தி செய்துள்ளார்.
சுதந்திர ஊடகவியலாளராகிய இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமூக நல அமைப்புகளில் ஸ்தாபக தலைவராகவும், செயலாளராகவும், ஊடக செயலாளராகவும், ஆலேசகராகவும் அங்கத்துவம் வகித்து சமூக பணியாற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாளராக திகழ்ந்து வருவதுடன், தற்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராகவும்
கடமையாற்றி வருகின்றார்.
இவர் கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சமாதான நீதவானாக செயற்பட்டு வந்த நிலையில் நீதி அமைச்சினால்.முழு இலங்கை தீவிற்குமான சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மட்டக்களப்பு, கல்லடி உப்போடையைச் சேர்ந்த திரு.திருமதி உதயகுமார் உதயரஜனி தம்பதியினரின் மூத்த புதல்வருமாவார்.