வாழைச்சேனை 05ம் வட்டாரத்தினை சேர்ந்த பதியுதீன் ஜெஸ்மிலா பானு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்ட படிப்பினை பூர்த்தி செய்து கொண்டார்.




07.01.2025 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 37வது பொது பட்டமளிப்பு விழா நிகழ்வில் இவர் இப்பட்டதினை பெற்றுக்கொண்டார்.

இவ்வருடம் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் இருந்து இப்பட்டதினை பெற்றுக் கொண்ட ஒரேயொரு முஸ்லிம் பெண் ஆளுமை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது இலங்கை சட்டக் கல்லூரியில்  Attorney -at- Law (R) இறுதி ஆண்டு மாணவியும் இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின ( SLIATE) HND in English (R- final year) மாணவியும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வியாபார முகாமைத்துவ உள்வாரி பட்டதாரியுமாவார்.