இந்தியவுடனான “ETCA” உடன்படிக்கை மிகவும் பாரதூரமானது - மக்கள் போராட்ட அமைப்பின் உறுப்பினர் வஸந்த முதலிகே

 


இந்தியவுடனான “ETCA” உடன்படிக்கை மிகவும்   பாரதூரமானது     என மக்கள் போராட்ட அமைப்பின் உறுப்பினர் வஸந்த முதலிகே குறிப்பிட்டார்.

இலங்கையின் எரிபொருள் மற்றும் மின் சக்தி வலையமைப்பினை இந்தியாவுடன் இணைத்தால் இலங்கையின் எரிசக்தி தொடர்பான ஆதிக்கம் இந்தியாவின் கைகளுக்கு செல்லும் என அவர் குறிப்பிட்டார்.

இந்தியவுடனான “ETCA” உடன்படிக்கை ஊடாக இந்தியாவில் உள்ள எந்தவொரு துறையில் உள்ள பணியாளர்களும் தடையின்றி இலங்கையில் தொழில் செய்யக்கூடிய கதவுகள் திறக்கும் என குறிப்பிட்டார்.

25 வயதுக்கு கீழ் உள்ள இந்தியா பட்டதாரிகளில் 50 வீதமானவர்களுக்கு தொழில் இல்லை.5 இலட்சம் மருத்துவர்களுக்கு தொழில் இல்லை.

இந்திய தொழிலாலர்களுக்கு இலங்கை தொழில் சந்தையை திறந்து விட்டல இலங்கையின் தொழில் துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என அவர் கூறினார்.