ஊடகவியலாளர்களுக்கான நில உரிமை தொடர்பான இரண்டு நாள் வதிவிட பயிற்சி திருகோணமலையில் இடம் பெற்றது.



 

 


 





 

 




 

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நில உரிமை தொடர்பான இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு  (14,15)ம் திகதி திருகோணமலை தனியார் விடுதியில் நடைபெற்றது.

இப்பயிற்சி செயலமர்வு அகம் மனிதாபிமான வள நிறுவனத்தினால் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் செயற்படும் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து இப்பயிற்சி நடாத்தப்பட்டது.

 நிலமீட்புக்கான செயற்றிட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் நிலம்சார் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் ஊடகவலையமைப்பினை  நிலம்சார் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இச் செயலமர்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பள்ளவக்குளம், திரியாய் கிராமங்களில் அண்மையில் இடம்பெற்ற விவசாய காணிகள் பிரச்சனைகளை பிரச்சனைகள் தொடர்பாகவும் கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு கள விஜயத்தை மேற்கொண்டு குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட திரியாய்  கிராமங்களில் காணி பிரச்சனைகள் தொடர்பாகவும் அப்பிரதேச மக்களுடனான சந்திப்பை மேற்கொண்டு அவர்களுடைய காணி பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.