மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் இக்னேசியார் ஆலய மறைக்கல்வி நிலையம் நடாத்திய ஒளிவிழாவும்,பரிசளிப்பும்!


 







(கல்லடி செய்தியாளர்)

 

 

 

மட்டக்களப்பு  கல்லடி புதுமுகத்துவாரம் இக்னேசியார் ஆலய மறைக்கல்வி நிலையம் நடாத்திய ஒளிவிழாவும்,மறைக்கல்விப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆலயத்தில் இடம்பெற்றது.

ஆலய பங்குத் தந்தை லோகநாதன் லோரன்ஸ் தலைமையில் நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வில் முன்னாள் பங்குத் தந்தை ஜோசப்மேரி அடிகளார்,கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நவாஜி அடிகளார் உட்பட அருட் தந்தையர்கள்,அருட்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மறைக்கல்வி மாணவர்களின் ஆற்றல் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆடல், பாடல்,நாடகம் மற்றும் பேச்சு ஆகிய  நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

இவ்விழாவில் மறைக்கல்விப் பரீட்சைகளில் திறமையாகச் செயற்பட்ட மாணவர்கள்  அதிதிகளால் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் இறுதியில் நத்தார் தாத்தா அரங்கிற்கு வருகை தந்து ஆடிப் பாடியதோடு,இனிப்புப் பண்டங்களையும் வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.