மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளி பிரதேச வைத்தியசாலையில் இரத்த தான முகாம் முன்னெடுக்கப்பட்டது

 


 


 

 






மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் ஒழுங்குபடுத்துதலின் கீழ் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் அனுசரனையுடன், கதிரவெளி  பிரதேச வைத்திய சாலையில் இரத்த தான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி ஜே.பீ.நிரோஜன் தலைமையில் இரத்த தான முகாம் இடம் பெற்றது.

வைத்தியர் கே.டீ.ஜீ. குசல்லா குருகே, பல்வைத்தியர் என்.எம்.சன்பர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க குழுவின் ஒத்துழைப்புடன் கடந்த 11/12/2024 அன்று கதிரவெளி பிரதேச வைத்தியசாலையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இரத்த வங்கி உத்தியோகத்தர்கள்   மற்றும்   தாதிய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.


பொலிஸ், இராணுவ உத்தியோகத்தர்கள் பிரதேச வாழ் பொதுமக்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்    எனப் பலரும்    கலந்து கொண்டு ஆர்வத்துடன் குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.

இந்த வருடத்தில் கதிரவெளி பிரதேச வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது இரத்ததான முகாம் என்பதும் குறிப்பிடதக்கது.