வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  மலேரியா அபாயம் உள்ள நாடுகளுக்கு சென்றுவந்தவர்களுக்கு மருந்தூட்டபட்ட நுளம்பு வலை வழங்கி வைக்கப்பட்டது.

 

 














 

 மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மலேரியா தடை இயக்க வைத்திய அதிகாரி  எம்.அச்சுதனின் வழிகாட்டலில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  மலேரியா அபாயம் உள்ள நாடுகளுக்கு சென்றுவந்தவர்களுக்கு அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நுளம்பு வலை வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியான.Dr.பாமினி அச்சுதன் தலைமையில்  மலேரியா அபாயம் உள்ள நாடுகளுக்கு சென்றுவந்தவர்களுக்கு மலேரியா நோய் ஏற்படாவண்ணம் தடுக்கும் முகமாக மருந்தூட்டபட்ட நுளம்பு வலை வினியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  பொது சுகாதார வெளிகள உத்தியோகத்தர் எஸ்.மனிமாறன்  மற்றும் இவ் விடயத்துக்கு பொறுப்பான  திருமதி.கேசவநந்தினி  சதானந்த குமார் ஆகியோர் பங்கேற்றனர்.