மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு மயிலவெட்டுவான் பொதுக் கட்டடத்தில் இடம் பெற்றது
அந்த வகையில் மயிலவெட்டுவான் பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிவன் அருள் பவுண்டேசன் மற்றும்
கனடா மொன்றியல் திருமுருகன் ஆலயத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவியின் மூலம் தலா ஒரு குடும்பத்திற்கு உலர் உணவு மற்றும் அரிசி பொதிகள் என்பன வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் உறுப்பினர்களான புவிந்திரநாத சர்மா ஐயா (ஸ்ரீ நாக லிங்கேஸ்வரர் ஆலயம் ஏறாவூர் எல்லைவீதி 04), உ.சஷான், பூ.கிரிதரன், ருத்விகன், சுதன் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.