மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு எதிராக செயல்படும் உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இ.முரளீஸ்வரன்

 



 

மட்டக்களப்பு மாவட்டத்தில்  எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு எதிராக செயல்படும் உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இ.முரளீஸ்வரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில்   எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு அதிக அளவிலான மக்கள் நகர்ப்புறங்களுக்கு வருவதனால் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு சுகாதாரத் திணைக்களத்தினால் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும்

 பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும்

 நோய்களிலிருந்து பாதுகாக்க சுகாதார பழக்கவழக்கங்களில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும்

 உணவாக உரிமையாளர்களும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்


 மாவட்டத்திலிருந்து தூர இடங்களுக்கு பிரயாணம் செய்யும் பொதுமக்கள்   நிறுத்தப்படுகின்ற உணவகங்கள் மீது சுகாதாரக் குறைபாடு காணப்பட்டால் உடனடியாக தமது அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறும் சம்பந்தப்பட்ட உணவகங்களுக்கு தான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படும் எனவும் எனவே பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு பின் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்