யாழ். காங்கேசன்துறை - நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (14.12.2024) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.