FREELANCER
இன்றைய தினம் 14.12.2024 மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளை உள்வாங்கிச் செயற்படுதல் சம்பந்தமான சமூக உள்வாங்கல் செயலமர்வு நடைபெற்றது.
இந்நிகழ்வானது Action Unity Lanka நிறுவனத்தால் ஒழுங்கமைப்பட்டது. AU LANKA வின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன் தலைமையில் இடம் பெற்ற செயலமர்வில் , வளவாளராக ஜெயக்குமார் பங்கேற்றிருந்தார் , மேலும் மாவட்ட சம்மேளன மாற்றுத் திறனாளிகளும், இளைஞர்களும், சிறுவர் வள நிலைய இலகு படுத்துனர்கள் , அலியார் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் , சமூக சேவை உத்தியோகத்தர் வவுணதீவு ராஜ்குமார் , அபிவிருத்தி உத்தியோகத்தர் M.கோகிலவாணி , K.சுரேஷ் திட்ட முகாமையாளர் AU LANKA, திட்ட இணைப்பாளர் ஜெகன் ராஜரெட்ணம் , மற்றும் P. நந்தகுமார் - சிறுவர் பாதுகாப்பு க இணைப்பாளர் , ரனோஷன் - காலநிலை மாற்ற கள உத்தியோகத்தர் ஆகியோரும் பங்கு பற்றி இருந்தனர் , AR.மேரியன் CBID ஒருங்கிணைப்பாளராக கலந்து கொண்டார் .
வலது குறைவு என்றால் என்ன
வலது குறைவின் வகைகள்
வலது குறைவினை தடுக்கும் வழி முறைகள்
வலது குறைவு ஏற்படும் காரணங்கள்
இலகுவில் பாதிக்கப்படக்கூடிய தன்மை
வலது நபர்கள் சேவைகளைப் பெற யாரை அனுகும் வேண்டும்
அனுகும் வசதி என்றால் என்ன
அனுகும் வசதியின் நன்மைகள்
ஏன் வலது குறைந்த நபர்கள் சமூக நிகழ்வுகளில் உள்வாங்கப்பட வேண்டும்
வலது குறைந்த நபர்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகள் போன்ற கற்கைகள் இந்தச் செயலமர்வில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது .
AU LANKA நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற , செயலமர்வுகள் , மற்றும் நிவாரண உதவிகள் , சமூக நலத் திட்டங்கள் , அனைத்திற்கும் CHILD FUND- SRILANKA நிதி அனுசரணை வழங்கிக்கொண்டிருப்பது குறிப்பிட தக்கதாகும்