போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8 ஆயிரத்துக்கும்
அதிகமானோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்
அலுவலகம் தெரிவித்துள்ளது
பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில்
பொலிஸாரால் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
அதன்படி, நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 8068
பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்
புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.





