மட்டக்களப்பு ஜெயந்திபுரம் "முழுமதி" சகவாழ்வுச் சங்கத்தின் ஒளிவிழா 2024 மிக விமர்சையாக 2024.12.14 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு ஜெயந்திபுரம் சகவாழ்வு சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
இவ்விழா "முழுமதி" சகவாழ்வுச் சங்கத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதிகளாக அக்டட் (ACTED) நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திரு.இ.ஹஜேந்திரன் கெஸ்தமனே கொஸ்பல் தேவாலயத்தின் வண. போதகர் பி டபுள்யூ மரியதாஸ் மற்றும் சங்கத்தின் திட்ட முகாமையாளர் திரு.வி.குகதாசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
ஜெயந்திபுரம் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ் பிரதீபன் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.மெ.லோரன்ஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவினை சிறப்பிக்கும் முகமாக சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. கலை நிகழ்வுகளில் பங்கு பற்றிய சிறார்களுக்கும் விருந்தினர்களுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் சங்க கூட்டத்திற்கு தொடர்ச்சியாக வருகை தந்த உறுப்பினர்களுக்கு வருகைக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சி தொகுப்பாளராக ஓய்வு நிலை அதிபர் திரு.செல்வம் வஸ்தியான்பிள்ளை அவர்களும் சங்கத்தின் செயலாளர் கோவிந்த நாதன் ருத்ரரூபரஞ்ஜனி பொருளாளர் ரூபகலா ராஜ்குமார் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.