மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஒளி விழா - 2024

 

 

 



 


 

 

 





 






 





வருடாந்தம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் ஒழுங்குசெய்து நடாத்தப்படும்  ஒளி விழா நிகழ்வானது இவ்வருடமும் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமை மற்றும் வழிக்காட்டுதலின் கீழ் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  மிகச் சிறப்பான முறையில் ஒழுங்குசெய்து நடாத்தப்பட்டது.

அதிதிகளினால் மங்கல விளக்கேற்றப்பட்டதை  தொடர்ந்து குறுமண்வெளி மெதடிஸ்த திருச்சபையின் சகோ.இராமையா ஜஸ்டின் பிரபாகரன்  அவர்களின்  ஆசிச்செய்தியுடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்களினால் கரோல் கீதம், நாடகம், நடனம் போன்ற பல கலைநிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன் , நத்தார் தாத்தா வருகை மற்றும்  அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், நிருவாக உத்தியோகத்தர் திரு வே. தவேந்திரன், அலுவலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட அலுவலக  உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.