அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் 172 வது ஜெயந்தி தின விழா இன்று மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
ராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கிளையின் பொது முகாமையாளர் சுவாமி. நீலமாதவானந்தர் ஜீ தலைமையில் இடம் பெற்ற ஜெயந்தி தின விழாவில் விசேட அதிதியாக ராமகிருஷ்ண மிஷனின் தெற்காசியக் கிளையின் தலைவர் சுவாமி சுவத்மானந்தா ஜீ மஹராஜ் கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்றியிருந்தார்.
மங்களாரதியுடன் ஆரம்பமான ஜெயந்தி தின நிகழ்வில் திருப்பள்ளியெழுச்சி, பக்திப் பாடல்கள், பஜனைப்பாடல்கள், ஹோமம், சிறப்ப சொற்பொழிவு, ஆரதி என்பன இடம் பெற்றது.
இதன் போது ராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கிளையின் உதவி பொது முகாமையாளர், நிருவாகிகள் உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் பக்தர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டு அன்னை சாரதா தேவியரின் அருள் ஆசியினை பெற்றுச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.