எதிர்வரும் 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு வடக்கே தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.