(கல்லடி செய்தியாளர்)
அருட்தந்தை ஆர்.திருச்செல்வம் உடல் நலச் சுகவீனம் காரணமாக காலமானார்.
இந்நிலையில் அவரது பூதவுடல் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய தேத்தாத்தீவு யுதாதேயு தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு,மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ அவரது பூதவுடல் வாகனப் பேரணி மூலம் ஆலையடிச்சோலை கிறிஸ்தவ மயானத்தில் சனிக்கிழமை (16) மாலை அடியவர்கள் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது பங்குத் தந்தையர்கள்,அருட் சகோதரர்கள்,அருட் சகோதரிகள்,பங்கு மக்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.








