freelancer
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில், அகில இலங்கை ரீதியில் விவசாய விஞ்ஞான வினாப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளான அ.ஹனன் மற்றும் ம.சாருகா ஆகியோர் இன்று வரவேற்கப்பட்டு பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கபட்டார்கள் .
கொழும்பு தேசிய கல்வி நிறுவனத்தில் கல்வி அமைச்சினால் 07.11.2024 ம் திகதி அன்று தேசிய மட்டப்போட்டி நடத்தப்பட்டது.
9 மாகாணங்களிலிருந்தும் தலா 05 மாணவர்கள் வீதம் பங்குபற்றினர். மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவியான அ.ஹனன் சூப்பர் மெரிட் சித்தி பெற்றார் , மாணவி ம.சாருகா மெரிட் சித்தி பெற்றார் .
விவசாய ப் பாட ஆசிரியர்களான திருமதி. தர்ஷனா தயாபரன் மற்றும் திருமதி. சவிதா சிவசங்கர் ஆகியோர் மாணவிகளை பயிற்றுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


















