தென்னக பிரபல நடிகர் மோகன்லால் இலங்கையை வந்தடைந்தார்.

 


 

பிரபல நடிகர் மோகன்லால் நேற்று (19) இலங்கையை வந்தடைந்தார்.


  இலங்கை வந்த நடிகர் மோகன்லாலுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சார்பாக அதன் பணியாளர்கள் மலர் கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர்.

 நடிகர் மோகன்லால் நான்கு முறை தேசிய விருதுகளைப் பெற்றவர், இரண்டு முறை மிகச்சிறந்த நடிகருக்கான விருதுகளையும், ஒரு தனிப்பட்ட நடுவர் குழு விருதும் ஓர் சிறந்த படத் தயாரிப்பாளர் விருதையும் பெற்றவராக திகழ்கின்றார்.

அந்தவகையில் நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்கான காரணங்கள் எவையும் வெளியாகாத நிலையில் இலங்கை வாழ் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்வுடன் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.