தேசிய மட்ட கர்நாடக சங்கீத தனி இசை போட்டியில் திகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவி சாதனை படைத்துள்ளார் .

 

EDITOR

 

 

 

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கர்நாடக சங்கீத தனி இசை போட்டிகள் 09/11/2024 அன்று திருகோணமலை கோணேஸ்வரா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கிழக்கு அம்பாறை மாவட்டம், திகோ/தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) இல் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவியும் , திரு திருமதி சுதர்ஷன் குமுதினி அவர்களின் புதல்வியுமான செல்வி சுதர்ஷன் தாமிரா அவர்கள் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.