இலங்கை கல்வி நிருவாக சேவை முதலாம் தர விசேட தரத்திற்கு சுஜாதா பதவி உயர்வு






 

BATTI VARATHAN

 

 

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண பதில் வலயக்கல்விப் பணிப்பாளருமான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் வகுப்பு விசேட தரத்திற்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச்சேவை குழுவினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இலங்கை கல்வி நிருவாக சேவையின்- 111 ம் தரம் ( கணிதம்) விசேட ஆளணிக்கு 2005 முதல் நியமிக்கப்பட்ட இவர் 2015 ம் ஆண்டு அச்சேவையின் 11 ம் தரத்திற்கும் பின் 2017 ம் ஆண்டு தரம்-1 ற்கும் பதவி உயர்த்தப்பட்டார்.

கல்குடா வலயக்கல்வி அலுவலகம், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றில் பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும், மட்டு.வின்சென்ட் பெண்கள் உயர் மகளிர் கல்லூரி அதிபராகவும் கடமையாற்றிய இவர் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுவதுடன் சம காலத்தில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகிறார்.

இலங்கை கல்வி நிருவாக சேவை தரம்-1 ன் விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற முதலாவது தமிழ் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு வாழைச்சேனையை பிறப்பிடமாகக்கொண்ட இவர் மட்டக்களப்பை வசிப்பிடமாக கொண்டவர்.