BATTI VARATHAN
தேசிய மக்கள் சக்தி புதிய அரசாங்கம் அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு மூன்றில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருக் கின்றது. இந்த சந்தர்ப்பத்தை பாவித்து இந்த நாட்டிலே தீர்க்கப்படாத பல விடயங்களை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. - அருண்மொழிவர்மன் தம்பிமுத்து தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர்.
தற்போது இலங்கை யில் நாடாளுமன்றத்தில் புதிய அரசாங்கம் பதவியேற்று இருக்கின்றது. அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் அவரது தேசிய மக்கள் சக்தி க்கும் மூன்றில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் முழுமையாக பாவித்து இந்த நாட்டிலே தீர்க்கப்படாத பல விடயங்களை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதை அவர்கள் கையில் எடுக்க வேண்டும் என்ற விடயத்தையும் நான் அவர்களுக்கு வலியுறுத்த கடமைப்பட்டிருக்கின்றேன்,
மட்டக்களப்பிலே மாற்றத்தை கொண்டு வர வேண்டும் மட்டக்களப்பில் ஒரு புதிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல கடமைகள் இருக்கின்றன, மட்டக்களப்பு மாவட்டத்தில் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருக்கின்றன,
நிச்சயமாக எமக்கான நிலப் பிரச்சினை மேச்சல் தரை பிரச்சனை இருக்கின்றது, வளங்கள் சூறையாடப்படும் நிலைமை காணப்பட்டு வந்திருக்கின்றது. இதற்கெல்லாம் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியைஆதரித்து வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நானும் ஒரு நிழல் பாராளுமன்ற உறுப்பினராக இந்த மாவட்டத்திலே தொடர்ச்சியாக எனது செயற் பாடுகளை முன்னெடுத்துச் செல்வேன் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்து இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.





