அகில இலங்கை தேசியமட்ட ஆங்கில தினப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வு மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசியபாடசாலையில் இடம் பெற்றது

 



















FREELANCR.



இன்றைய தினம் (2024.11.18) மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில், அகில இலங்கை தேசியமட்ட ஆங்கிலதினப் போட்டியில் தனி நிகழ்வான படைப்பெழுத்தாக்கம் (Creative Writing )போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தை பெற்றதரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி சுரேஸ் ஷேஷாங்கி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாணவியை , பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் இவரது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர். இது எமது மட்டு மண்ணிற்கு மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும். இந்த வெற்றியை தனதாக்கிக் கொண்ட மாணவிக்கும் அவரினை பயிற்றுவித்த ஆசிரியருக்கும் மற்றும் அவரை ஊக்கப்படுத்திய பெற்றோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இம்மாணவி இவ்வாண்டு நடைபெற்ற பல தேசியமட்டப் போட்டிகளில் பல வெற்றிகளை தனதாக்கிக் கொண்டு பாடசாலை சமூகத்திற்கும் எமது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் தேசியமட்ட உடற்பயிற்சி கண்காட்சியில் தலைமைத்துவத்தினை ஏற்று நடாத்தி முதலாமிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தினை பெற்றுக்கொண்ட அதேவேளை அதில் சிறந்த தலைவருக்கான விருதினையும் தனதாக்கிக் கொண்டார். மேலும் அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில் இலக்கிய நாடக போட்டிநிகழ்வில் பிரதான கதாபாத்திரமான பரதன் கதாபாத்திரம் தாங்கி நடித்திருந்தார் இந்நாடகம் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இம்மாணவி இவ்வாறு இணைப் பாடவிதானம் சார்ந்த செயற்பாடுகளில் அபார திறமையினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற அதே வேளை கல்விசார் நடவடிக்கைகளிலும் இவரின் செயற்பாடுகள் சிறப்புக்குரியதாக காணப்படுகின்றது. இவர் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்களான சுரேஸ் மற்றும் ஜெயப்பிரபா ஆகியோரின் ஏக புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.