(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய வருடாந்த ஒளிவிழா இன்று வெள்ளிக்கிழமை (22) பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற வருடாந்த ஒளி விழாவில்,
கல்லடி புதுமுகத்துவாரம் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய லோகநாதன் லோரன்ஸ் ,இஞ்ஞாசியார் ஆலய முன்னைநாள் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய யோசப்மேரி அடிகளார் ஆகியோர் ஆன்மீக அதிதிகளாகவும்,வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர்களான உமா பரமேஸ்வரன் மற்றும் திருமதி புஸ்பராணி விஸ்வநாதன் ஆகியோர் அழைப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயேசு பிரானின் உயிர்ப்பை நினைவு கூரும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடை ஏற்றப்பட்டன, அத்தோடு மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும் அரங்கேறின,
இதன்போது நத்தார் கீதங்களும் இசைக்கப்பட்டன.நிகழ்ச்சிகளின் பங்குபற்றிய மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இறுதியாக நத்தார் தத்தா அரங்கிற்கு வருகை தந்து ஆடிப்பாடியதோடு,இனிப்புப் பண்டங்களையும் வழங்கி மகிழ்வித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் ,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நத்தார் விழாவைச் சிறப்பித்தனர்.





















