#Socio Wave
நேற்றைய தினம்
தமிழகத்தில் இடம்பெறவுள்ள நடிகர் தளபதி விஜய் அவர்களின் கட்சி மாநாட்டில், குறித்த பாடலானது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது
இப் பாடலை எழுத வாய்ப்பினை வழங்கிய
நடிகர் தளபதி விஜய் அவர்களுக்கும் அவரது கட்சி மற்றும் சுகிதநிலா யூடியூப் தளம் மற்றும் தென்னிந்திய இசையமைப்பாளர் அக்னிகணேஷ் ஆகியோருக்கு நன்றிகளை தனது முகாநூல் வழியாக ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடலாசிரியர் தமிழகத்திலுள்ள திருவண்ணாமலை கீழ்ப்பென்னாத்தூர் அங்காளபரமேஸ்வரிக்கும் பாடலை எழுதியுள்ளதோடு, தென்னிந்திய பிரபல திரை நட்சத்திரம்
G V பிரகாஸ் (இசையமைப்பாளர் மற்றும் நடிகர்) அவர்களின் தயாரிப்பில் "நாம்" பாடல் இவ் வருடம் மார்கழி மாதம் மிகப் பிரம்மாண்டமாக வெளியீடுகாணவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படைப்பில் ஈழத்தின் பிரபல பாடலாசிரியர் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் ( பாடலாசிரியர், உளநல ஆலோசகர்) அவர்கள் பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.
இவர் சிறுவயது தொடக்கம் இசையின் மீதும் கலைத்துறையின் மீதும் கொண்ட ஆர்வத்தால் சங்கீதத்தை முறையாக கற்றதோடு, தனது முயற்சிகளில் எப்போதும் பின்வாங்கியதுமில்லை.
இதுவரை எழுச்சி பாடல்கள், பக்தி பாடல்கள், சினிமா பாடல்கள், பாரம்பரிய தமிழர்களின் கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், பிள்ளையார் நடனம், கும்மி, வரவேற்பு நடனம், பிள்ளையார் நடனம், புலி நடனம் போன்றவற்றையும் எழுதியுள்ளதோடு வாழ்த்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
அண்மையில் பட்டிதொட்டி எல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கும் "சுழிபோட்டு செயல்தொடங்க வைத்தவா" பாடலை எழுதிய பெருமையும் இவரையே சாரும்.
நடிகராகவும் பாடகராகவும் அறிவிப்பாளராகவும் திரைகதை எழுத்தாளராகவும் இயக்குனராகவும் மட்டுமன்றி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வு எழுத்தாளர் என பன்முக திறன்களைக்கொண்டவராகவும் விளங்கிவருகின்றார்.
இந்திய சினிமா நட்சத்திரங்களோடு இணைந்து 20ற்க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளதோடு அண்மையில் இந்திய ஈழத்து கலைஞர்களின் உருவாக்கத்தில் வெளிவரவுள்ள சினிமா படத்தில் நடித்துள்ளதோடு, அப் படத்தில் இரு பாடல்களை எழுதியுள்ளதோடு திரைப்படத்திற்கான திரைகதையையும் எழுதி உதவி இயக்குனராகவும் செயற்பட்டுள்ளார்.
இவர் அரச உத்தியோகத்தர் என்பதையும் கடந்து சமூக சேவைகளையும் கிடைக்கும் நேரங்களில் முன்னெடுத்து வருகின்றார். இதுவரை இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களையும் பனை விதைகளையும் நாட்டியுள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள், தலைமைத்துவ பயிற்சி நெறிகள் போன்றவற்றை பாடசாலைகள் மற்றும் கிராம மட்டங்களில் அதிகளவு முன்னெடுத்துள்ளார்.
இவ்வாறு பல திறமைகளை தன்னகக்தேகொண்டு ஆர்ப்பாட்டமில்லாமல் தனது பயணத்தை முன்னெடுக்கும் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவனின் கலைப்பயணம் வெற்றிபெற நாம் வாழ்த்துவதோடு, இவரைப்போன்ற கலைஞர்களை வாழும்போதே வாழ்த்துவது எமது தலையாய கடமையுமாகும்.