நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசநிறுவனங்களையும் மறுசீரமைப்பு செய்வது குறித்த பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் தீர்மானிக்கும்.

 


நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசநிறுவனங்களையும் மறுசீரமைப்பு செய்வது குறித்த  பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் தீர்மானிக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் உட்பட நஷ்டத்தில் இயங்கும் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது மற்றும் மத்தல விமானநிலையத்தினை வேறு நிர்வாகத்திடம் கையளிப்பது போன்ற முடிவுகளை பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் எடுக்கவுள்ளதாக விடயமறிந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 முன்னைய அரசாங்கம் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான பிரிவொன்றை உருவாக்கியிருந்தது.

எனினும் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் இந்த பிரிவை சேர்ந்தவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

முன்னைய அரசாங்கம் உருவாக்கிய அரசநிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான பிரிவினை கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து கேள்விக்கு அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் பொதுத்தேர்தலின் பின்னரே நஷ்டத்தில் இயங்கும் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்த தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை விற்க மாட்டோம்,என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் புதிதாக நியமித்துள்ள முகாமைத்துவகுழுவுடன் கலந்தாலோசித்த பின்னர் புதிய அபிவிருத்தி திட்டமொன்iறை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.