பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வது தொடர்கிறது.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் “டோக்கன்” வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை,நள்ளிரவு முதல் டோக்கன் பெறுவதற்காக மக்கள் குறித்த பிரதேசத்தில் காத்திருக்கிறார்கள்.
இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்ததுடன், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதன் மூலம் அந்த நெருக்கடி முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு உரிய தீர்வை இதுவரை வழங்க முடியவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும்,டோக்கன் பெறும் நபருக்கு இரண்டு வாரங்கள் கழித்தே கடவுச்சீட்டு பெறுவதற்கான “நாள்” வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.