பேருவளை நகரப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு பதினொரு மாணவர்களையும் ஆசிரியர் ஒருவரையும் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பேருவளை பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தினகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது பதினொரு மாணவர்கள், அவர்களது பைகள் மற்றும் ஒரு ஆசிரியர் இருந்ததாகவும் குறித்த ஆசிரியருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.