தேசிய ரீதியில் பதக்கங்களை பெற்ற மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்வு .

 

 

 

 

 





 

 

 





 











FREELANCER



 மட்டக்களப்பு  கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் இருந்து    தேசிய மட்டத்தில்  இடம் பெற்ற மல்யுத்த போட்டியில் பங்கு பற்றி தங்கப்பதக்கம்  மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்ற இரண்டு மாணவிகள்  பாடசாலை சமூகத்தால்   பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள் .
தேவதாஸ் தர்மி 20வயதின் கீழ்ப்பிரிவில்  (44-47kg நிறை)மல்யுத்த போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கம் பெற்று வெற்றி ஈட்டியுள்ளார், மேலும் ஒரு மாணவி வாசுதன் கனிக்கா  18வயதின் கீழ்ப்பிரிவில் (57-61kg)பங்குபற்றி  வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளார் .
இன்றைய தினம்  காலை (2024.10.04 ) பாடசாலை ஒன்று கூடல் நிகழ்வின் போது நடராஜானந்தா  மண்டபத்தில்  வெற்றியீட்டிய மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக இடம் பெற்றது .
 பாடசாலை அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் வாமநாதன் லவக்குமார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .
இவ் நிகழ்வுக்கு பாடசாலை  மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .