தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தது

 

 

 

 


 

 மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி யிடுவோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்றைய தினம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
 மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்திற்கு வரும் வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.