ஜனாதிபதியை விமர்சனம் செய்து அரசியல் இலாபம் தேட வேண்டியதில்லை- ஜீவன் தொண்டமான்

 


ஜனாதிபதியை விமர்சனம் செய்து அரசியல் இலாபம் தேட வேண்டியதில்லை. ஆகவே கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டுமானால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான்,

நாட்டில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் நாட்டு மக்கள் பாரிய கஸ்டத்தை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்தார்.

இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேல், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் இளைஞர் அணியின் பொகவந்தலாவ அமைப்பாளர் இளையராஜா, நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான மாடசாமி சரோஜா பிரபு, மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.