தமிழர் பண்டிகைகளில் பிரதான வகிபாகம் வகிக்கும் ஓர் பண்டிகையாக தீபாவளி காணப்படுகிறது. அன்பினையும் பண்பினையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் மனமலர்வையும் தருவதாக அல்லது வெளிப்படுத்துவதாக தீபத்திருநாள் காணப்படுகிறது.
நாம் ஒவ்வொருவரும் ஏனையவர்களுக்கும் புரிந்துணர்வுடன் வாழ வேண்டும். ஒரு இனத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சமயத்தினரது உயர்வினை தனித்துவத்தினை பேண வேண்டும். தனி ஒவ்வொருவரது உணர்வுக்கும் மதிப்பு வழங்க வேண்டும்.
ஆனால் நமது தேசத்தில் இக்காலப்பகுதி வரை இவற்றினை பூரணமாக காண இயலாதுள்ளது. சாதாரண மக்கள் முதல் ஆட்சியில் உள்ளவர்களது மனநிலை மாற வேண்டும். அனைவரையும் சமமாக மதிக்கும் வகையில் மனநிலை மாற்றம் பெற வேண்டும்.
இவற்றை மனதில் வைத்து,
இந்துக் குருமார் அமைப்பு சார்பில்- ஒவ்வொருவரையும் சூழவுள்ள இருள் அகன்று மனதிலும் எண்ணத்திலும் செயலிலும் நல்லன நடைபெற திருவருளும் குருவருளும் ஒருசேர கிடைக்க வேண்டும் என அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்து மனமார்ந்த நிறைந்த நல்வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
"சிவாகமகலாநிதி" சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.
தலைவர், இந்துக் குருமார்.
சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.
செயலாளர் இந்துக் குருமார் அமைப்பு
சுபமங்களம்.
29.10.2024.