நடைபெற்று முடிந்த ஜனாதிபதித்தேர்தலில் தமது தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய அரியநேத்திரன் உட்பட மூவருக்கு எதிராக சட்ட சடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக தேர்தல் ஆணையம் (EC) அறிவித்துள்ளது.
இதன்படி வண. பத்தரமுல்லே சீலரதன தேரர், சரத் கீர்த்திரத்ன மற்றும் பி.அரியநேத்திரன் ஆகியோரே அந்த மூன்று வேட்பாளர்களுமாவர்.
இந்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.