மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் முக்கிய பிரச்சனையாக காணப்படுவது கல்வியும் பொருளாதாரமும் கிராமங்களில் வீட்டில் ஒருவரை தான் படிக்க வைக்க கூடிய வசதி தற்போது காணப் படுகின்றது இந்த நிலை மாற வேண்டும் கல்விதான் முக்கியம் கல்விதான் முதல் தீர்வும்
இந்த அரசியல் கட்சியின் பயணத்தின் ஊடாக எனது நோக்கம் இதுதான் கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும் கல்வி அதிகமாக இன்னும் மக்களிடம் சேர்க்கப்பட வேண்டும் இந்த கல்வியின் ஊடாக நல்ல வேலை வாய்ப்பினை பெற்று ஒரு பொருளாதார வளர்ச்சியினை நாம் அடைய முடியும் .
இலங்கையிலே கிழக்கு மாகாணம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக உள்ளது இந்த நிலைமை மாற வேண்டும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார நிலைமைகள் மாற்றப்பட வேண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வர்த்தகர்களை என்னால் உருவாக்க முடியும் அவர்களுக்கான வழிகாட்டலையும் ஆலோசனைகளையும் என்னால் வழங்க முடியும்
உலக சந்தையை நோக்கிய கற்கை நெறிகள் இன்று உலகத்தில் எல்லாம் ஐ.டி தொழில்நுட்பம் ஆகியுள்ளது அவை சார்ந்த கற்கைநெறிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் உலக சந்தையை நோக்கிய பொருளாதார குறிக்கோளுடன் மட்டக்களப்பு மாற்றப்பட வேண்டும் இலங்கையிலே மட்டக்களப்பு மாவட்டம் ஒரு முன்மாதிரியான மாவட்டமாக மாற்றப்பட வேண்டும்
மாற்றப்படும் அதற்கான என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே நான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து இம்முறை பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடுகிறேன் என வேட்பாளர் லியோன் சுஜித் லோரன்ஸ் அவர்கள் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்