கிளிநொச்சியில் கடந்த வருடம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கசிப்பு சார்ந்த குற்றச் செயல்களுக்காக நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போதைக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதன்போதே, கடந்த வருடம் கசிப்புக் காய்ச்சிய, விற்பனையில் ஈடுபட்ட 3004 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிட, சாராயத்தை சட்டவிரோதமாக வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் 21 பேரும், போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 பேரும் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.





