கொழும்பு கோட்டை - மட்டக்களப்பு புகையிரத சேவைகள் நாளை முதல்(2026.01.20) புதிய நேரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

 


கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்குமான புகையிரத சேவைகளின் நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் புதிய நேரத்தில் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 3.15 க்கு புறப்படும் புலத்திசி தொடருந்து இரவு 11.23 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.
மட்டக்களப்பில் இருந்து அதிகாலை 1.30 க்கு புறப்படும் புலத்திசி தொடருந்து காலை 9.28 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும்
மேலும் மட்டக்களப்பில் இருந்து காலை 6.10 க்கு புறப்படும் உதயதேவி தொடருந்து மாலை 3.37 க்கு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும்.
கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் உதயதேவி தொடருந்து மாலை 3.36 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.