சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு "வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" மயிலம்பா வெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தின் சிறுவர் தின விழா நிகழ்வு (01) காலை 10.00 மணிக்கு உதவும் கரங்கள் அமைப்பின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ச.ஜெயராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமாகிய தேசபந்து எம்.செல்வராசா அவர்களும் அவரது பாரியார் திருமதி.எஸ்.சூட்டி அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலையத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.குகதாசன், விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார், நேசம் அறக்கட்டளை பணிப்பாளர் க.சற்குரு லிங்கம், மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ், அகிம்ஷா சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜா, முழுமதி சகவாழ்வு சங்கத்தின் தலைவர் சு.முகுந்தன், நடராஜா சைவ சித்தாந்த பயிற்சி மையத்தின் ஒய்வு நிலை அதிபர் சைவப்புரவலர் மூ.சிவகுமாரன் ஆகியோரும் உதவும் கரங்கள் இல்லத்தின் நிருவாகிகளும் சிறார்களும், அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர் கலந்து சிறப்பித்தனர்.
இச் சிறுவர் தின விழா நிகழ்வில் சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் மேடையை அலங்கரித்திருந்தன.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான அன்பளிப்புப் பொருட்களும் இதன்போது சிறுவர்களுக்கு அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், பிரதம அதிதிக்கு பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், அவரது சமூக சேவையினை பாராட்டி வாழ்த்து மடல் ஒன்று உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.