மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் பாடசாலை சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள் -2024.10.01

 




 





 





 



 

2024.10.01  இன்று மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் பாடசாலை சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள் காலை ஒன்று கூடலுடன்  கல்லூரியின் முற்றத்தில் ஆரம்பமாகியது .
முதல் நிகழ்வாக இறை வணக்கம் இடம் பெற்றது, அதனைத் தொடர்ந்து பிரதி அதிபரால் பாடசாலை கொடியும் , கல்லூரி முதல்வரால் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது . மேலும் அதிபர் அவர்களால் சிறுவர்தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு தேசிய மல்யுத்தப்போட்டியில் முதலாம் இடம் மற்றும் மூன்றாம் இடத்தை  பெற்ற மாணவிகளை வாழ்த்தினார் . அதன் பின் சிறப்பு விருந்தினராக வருகை தந்த மாவட்ட செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்  திருமதி நிஷா ரியாஸ் அவர்கள் உலக சிறுவர்தின கருப்பொருளான  "பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்"  எனும் தொனிப்பொருளில் சிறு   உரை இடம் பெற்றது .
அத்துடன் விசேட தேவை உடைய S. மதுமிதா அவர்களால் "ஒவ்வொரு பூக்களுமே" எனும் பாடல் இசைக்கப்பட்டது .
மேலும் ஒரு பாடல்  தரம் 11. மாணவி  த.ஜக்சயா அவர்களால் இசைக்கப்பட்டது .
அதன் பின்னர் 2023- கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி அடைந்த அனைத்து மாணவர்களையும் பாராட்டி ஆசிரியர் நலன்புரித்தலைவர் அவர்களால் நன்றி கூறி முதல் கட்ட நிகழ்வுகள் முடிவடைந்தன .
இரண்டாம் கட்ட நிகழ்வாக தரம் 1- தொடக்கம் 5- வரையான மாணவர்களது பலூன்களுடனான விளையாட்டு இடம் பெற்றது . அத்துடன் சங்கீத கதிரை என பல்வேறு உத்சாகமூட்டும்   விளையாட்டுகள் என்பன தரம் 13. வரையான மாணவிகள் விளையாடி மகிழ்ந்தனர் , அத்துடன் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன .